கேரளாவில் பகல்-இரவு என முழு ஊரடங்கு: பொதுமக்கள் அதிர்ச்சி

 
lockdown

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ஆனால் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

நேற்று மட்டும் கேரளாவில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,265 என்றும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 153 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 2.04  என்றும் கேரள அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த மத்திய அரசு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 6 மணி முதல் இரவு நேர ஊரடங்கு என கேரள மாநில அரசு அறிவித்துள்ளது

அதுமட்டுமன்று இன்று பகல்-இரவு என முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் இந்த ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது இன்று முழு ஊரடங்கு மற்றும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு என்ற கேரள அரசின் அறிவிப்பு அம்மாநில மக்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

From around the web