"முதல்ல சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்"- பாஜக மாநிலத்தலைவர்!

முதலில் திமுக தான் கூறிய வாக்குறுதிகளில் ஒன்றான ஆயிரம் ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் முருகன் கூறியுள்ளார்
 
murugan

நம் தமிழகத்தில் தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியே நடைபெற்று வருகிறது. மேலும் திமுக கட்சியானது பத்து ஆண்டுக்கு பின்னர் ஆளும் கட்சியாக வளர்ந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் திமுக கட்சி சார்பில் முதல்வராக கட்சியின் தலைவரான முகஸ்டாலின் உள்ளார். அவர் தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளை கூறியிருந்தார் அவை ஒவ்வொன்றையும் தற்போது வரிசையாக நிறைவேற்றுகிறார். மேலும் தமிழகத்தில் தற்போது எதிர்க்கட்சியாக வந்துள்ளது அதிமுக. அதிமுக சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலில் சந்தித்தன.dmk

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 4 எம்எல்ஏக்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்கள் 20 ஆண்டுகளுக்கு பின்னர் முதன்முறையாக தமிழகத்தில் பாஜக எம்எல்ஏக்கள் உருவானது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பாஜக மாநிலத் தலைவராக முருகன் உள்ளார். மேலும் அவர் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு கடைசி நேரத்தில் தோல்வியை தழுவினார். இந்நிலையில் அவர் தற்போது செய்தியாளர்களை சந்தித்த சில தகவல்களை கூறியுள்ளார்.

திமுக தான் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் மிகவும் வன்மையாக கூறினார். மேலும் அவர் குடும்பத்திற்கான ஆயிரம் ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அதை அவர்களின் அக்கவுண்டில் போட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் நீட் தேர்வை தமிழக அரசால் ரத்து செய்ய முடியாது என்று திமுகவிற்கு தெரியும், ஆயினும் மக்கள்,மாணவர்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்த எதற்காக இத்தகைய நாடகம் அரங்கேற்றியதாகவும் அவர் கூறினார். மேலும் தமிழக மாணவர்களின் கல்வி தரத்தை சர்வதேச மாணவர்கள் கல்விதரத்திற்கு உயர்த்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

From around the web