செப் 1 முதல் சுங்கக்கட்டணம் உயர்வு: அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

நாளை முதல் சுங்கக் கட்டணங்கள் உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்ததோடு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் என்ற அதிர்ச்சியில் பொதுமக்கள் உள்ளனர் ஏற்கனவே சுங்க கட்டணம் வசூலிக்க தமிழகம் உள்பட நாடு முழுவதும் எதிர்ப்பு இருந்து வருகிறது. தமிழர் வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் உள்பட பலர் சுங்க கட்டணத்திற்கு தங்களுடைய எதிர்ப்பைத் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர் இந்த நிலையில் நாளை முதல் சுங்க கட்டணம் மீண்டும் உயர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்
 

செப் 1 முதல் சுங்கக்கட்டணம் உயர்வு: அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

நாளை முதல் சுங்கக் கட்டணங்கள் உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்ததோடு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் என்ற அதிர்ச்சியில் பொதுமக்கள் உள்ளனர்

ஏற்கனவே சுங்க கட்டணம் வசூலிக்க தமிழகம் உள்பட நாடு முழுவதும் எதிர்ப்பு இருந்து வருகிறது. தமிழர் வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் உள்பட பலர் சுங்க கட்டணத்திற்கு தங்களுடைய எதிர்ப்பைத் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்

இந்த நிலையில் நாளை முதல் சுங்க கட்டணம் மீண்டும் உயர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, உள்ளிட்ட 21 சுங்கச் சாவடிகளில் நாளை முதல் ரூ.5 முதல் 10 ரூபாய் வரை சுங்கக்கட்டணம் உயர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் வாகன உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

ஏற்கனவே விலைவாசி மிக அதிகமாக உயர்ந்து வரும் நிலையில் தற்போது சுங்கக்கட்டண உயர்வு காரணமாக மீண்டும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

ஒரு பக்கம் சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் சுங்க கட்டணத்தை மேலும் அரசு உயர்த்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

From around the web