தமிழகத்தில் நாளை முதல் திறக்கப்படும் ஓட்டல்கள்: என்னென்ன நிபந்தனைகள்?

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த காரணத்தினால் பல அலுவலகங்கள், தியேட்டர்கள், ஹோட்டல்கள், கடைகள் ஆகியவை மூடப்பட்டு இருந்தன என்பது தெரிந்ததே இந்த நிலையில் தற்போதைய ஐந்த கட்ட ஊரடங்கில் ஒருசில தளர்வுகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வரும் வகையில் பல்வேறு கடைகள், அலுவலகங்கள் திறந்துவிட்டன. இருப்பினும் ஹோட்டல்கள் திரையரங்குகள் மால்கள் உள்பட ஒரு சிலவற்றை மட்டும் இன்னும் திறக்கஅனுமதி அளிக்காமல் இருந்தது இந்த நிலையில் ஹோட்டல்கள் நாளை முதல்
 
தமிழகத்தில் நாளை முதல் திறக்கப்படும் ஓட்டல்கள்: என்னென்ன நிபந்தனைகள்?

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த காரணத்தினால் பல அலுவலகங்கள், தியேட்டர்கள், ஹோட்டல்கள், கடைகள் ஆகியவை மூடப்பட்டு இருந்தன என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போதைய ஐந்த கட்ட ஊரடங்கில் ஒருசில தளர்வுகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வரும் வகையில் பல்வேறு கடைகள், அலுவலகங்கள் திறந்துவிட்டன. இருப்பினும் ஹோட்டல்கள் திரையரங்குகள் மால்கள் உள்பட ஒரு சிலவற்றை மட்டும் இன்னும் திறக்கஅனுமதி அளிக்காமல் இருந்தது


இந்த நிலையில் ஹோட்டல்கள் நாளை முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. எனினும் இந்த ஹோட்டல்கள் செயல்பட வழிகாட்டு முறைகள் சில அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் ஹோட்டல் திறக்கப்படும் நிலையில் அனைத்து ஹோட்டல்களிலும் தெர்மல் ஸ்கிரீன் கருவியை வைக்க வேண்டும் என்றும் கை கழுவும் இடத்தில் கிருமி நாசினி மற்றும் சோப்பு வைத்திருக்க வேண்டுமென்றும் வழிகாட்டு முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் ஒரு டேபிளுக்கு மற்ற டேபிளுக்கும் இடையே ஒரு மீட்டர் இடைவெளி கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும் 50% இருக்கைகளில் மட்டுமே வாடிக்கையாளர்கள் உட்கார அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது

அதுமட்டுமின்றி ஓட்டல் ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் மற்றும் கையுறை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றும் கொரோனா நோய் பாதிப்பு அறிகுறி இருப்பவர்களை ஓட்டலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் கொரோனா பாதிப்பு உள்ளவர்களை பணியிலும் வைத்திருக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளை கடைபிடித்து ஹோட்டல்கள் செயல்பட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web