இனிமேல் ஐகோர்ட்டில் 9 நீதிபதிகள் மட்டுமே வழக்குகளை விசாரிப்பார்கள்!!!

ஜூன் 1-ஆம் தேதி முதல் 11-ம் தேதி வரை 9 நீதிபதிகள் மட்டுமே சென்னை உயர்நீதிமன்றத்தில் அனைத்து வழக்குகளை விசாரிப்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது
 
highcourt

 நம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது ஏன் தமிழகத்தில் மட்டும் அதிகமாக உள்ளது என்று கேட்டால் பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது மிகவும் அதிகஅதிகமாக உள்ளது. மேலும் பல மாநிலங்களில் இந்த கொரோனா பாதிப்பானது தொடர்ந்து குறைந்து வருகிறது., ஆனால் தமிழகத்தில் அதிகரித்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் பல்வேறு தடைகளும் கட்டுப்பாடுகளும் தமிழக அரசின் சார்பில் முதல்வராக உள்ள மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அதன்படி தற்போது ஊரடங்கு நடைமுறையில் உள்ளன. மேலும் அடுத்த வாரம் ஊரடங்கு எப்படி இருக்கும் எவற்றுக்கெல்லாம் அனுமதி என்றும் எதிர்பார்ப்போடு உள்ளனர் மக்கள்.highcourt

இந்நிலையில் தற்போது ஐகோர்ட்டும் இந்த ஊரடங்கு உதவும் வண்ணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி ஐகோர்ட்டில் இனிமேல் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 11-ம் தேதி வரை 9 நீதிபதிகள் மட்டுமே அனைத்து வழக்குகளையும் விசாரிப்பார்கள் என்று கூறப்படுகிறது.கொரோனா கட்டுப்பாடு காரணமாக சிறப்பு அமர்வுகளை சென்னை ஹைகோர்ட் அறிவித்துள்ளது. மேலும் முக்கிய வழக்குகள் மட்டுமே ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 11-ம் தேதி வரை சிறப்பு அமர்வு களால் விசாரிக்கப்படும் என்றும் ஐகோர்ட் திட்டவட்டமாக கூறியுள்ளது.

மேலும் அனைத்து நாட்களிலும் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு செயல்படும் என்றும் ஹை கோர்ட் கூறியுள்ளது .மேலும் ஜூலை 1 முதல் 3 வரை, நான்கு முதல் எட்டு வரை, 9 முதல் 11 வரை தலா 9 நீதிபதிகள் வழக்கை விசாரிப்பதில் என்றும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் இரண்டு நீதிபதிகள் கொண்ட இரண்டு அமர்வுகள் மற்றும் மூன்று தனி நீதிபதிகளின் அமர்வுகள் வழக்குகளை விசாரிக்கும் என்றும் கூறியுள்ளது.

மதுரையில் ஜூன் 1 முதல் 7 வரை, 8 முதல் 11 வரை  தேதியில் 7 நீதிபதிகள்  என்றும் கூறியது. மதுரையில் இரு நீதிபதிகள் அடங்கிய 2 அமர்வு களும், தனி நீதிபதிகளில் மூன்று அமர்வுகள் வழக்குகளை விசாரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

From around the web