80 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச வாகன வசதி தேர்தல் ஆணையம் ஏற்பாடு!

80 வயதிற்கு மேற்பட்ட குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!
 
80 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச வாகன வசதி தேர்தல் ஆணையம் ஏற்பாடு!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளைய தினம் நடைபெற உள்ளது. அதற்காக தமிழகத்தில் தேர்தல்வேலைகள் அனைத்தும் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தேர்தல் அதிகாரிகள் தங்களது வேலைகளில் பொறுப்புடன் தங்களுடன் வேலைகளில் செயல்படுகின்றனர். மேலும் தேர்தல் ஆணையம்  தேர்தலுக்கான விதிமுறைகளையும் விதித்துள்ளது. மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பலத்த பாதுகாப்புடன் தமிழகத்தின் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

saagu

 தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இந்த 234 தொகுதிகளிலும் நாளைய தினம் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேலும் இந்த 234 தொகுதிகளுடன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் இடைத்தேர்தல் காண வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தற்போது தேர்தல் ஆணையம் 80 வயதுக்கு மேற்பட்டகளுக்கு உதவும் விதமாக செயல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி 80 வயதுக்கு மேற்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிக்க இலவச வாகன வசதி ஏற்பாடு செய்துள்ளது. சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஐந்து கிலோமீட்டர் தூரம் வரையும் மற்றும் ரூபாய் 200 ரூபாயும் கட்டணத்தை தேர்தல் ஆணையம் ஏற்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

வாகன வாடகை வாகனங்களை பயன்படுத்தி முன்பதிவு செய்யலாம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் விருப்பத்தின் பேரில் இந்த வசதியை பெற்று ஜனநாயக கடமையாற்ற லாமென்று சத்யபிரதா சாகு இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் சத்யபிரதா சாகு  தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web