பிளாஸ்டிக் குப்பை கொடுத்தால் இலவச இண்டர்நெட்: ஆச்சரிய அறிவிப்பு

 

உலகம் முழுவதும் பிளாஸ்டிக் குப்பை பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தோனேசியாவில் பிளாஸ்டிக் குப்பைகளை சேர்க்க தொண்டு நிறுவனம் ஒன்று புதிய வழி ஒன்றை கண்டுபிடித்துள்ளது

இதன்படி இந்தோனேசியாவில் ஒரு கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை கொடுத்தால் 9 மணி நேரம் இலவச இன்டர்நெட் இணைப்பு வழங்கப்படும் என்று அந்த தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது

இந்தோனேஷியாவில் பிளாஸ்டிக் கழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து அந்நாட்டில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து குழந்தைகளின் கல்விக்கு உதவும் தொண்டு நிறுவனம் ஒன்று ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்தால் அவர்களுக்கு 9 மணி நேரம் இலவச இன்டர்நெட் சேவை வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது 

இதனை அடுத்து பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பிளாஸ்டிக் குப்பைகளை கொண்டு வந்து கொடுத்து இன்டர்நெட்டை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மேலும் ஏழை எளிய மாணவர்கள் தங்களுக்கு தேவையான இன்டர்நெட்டை இலவசமாக பெறுவதற்காக தெருவில் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து வரும் காட்சிகளும் ஆங்காங்கு காண முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web