ஜூன் முதல் இலவச மளிகை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

 
stalin

தமிழகத்தில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு மே 31-ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் தமிழக முதல்வரின் அறிவிப்பு ஒன்றில் மேலும் ஒருவாரம் தளர்வுகள் அற்ற ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து ஜூன் மாதம் 7-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த காலகட்டங்களில் காய்கறிகள் மற்றும் மளிகை கடைகள் திறக்கப்படாது என்பதால் ஏற்கனவே காய்கறிகள் பொதுமக்களுக்கு கிடைப்பதற்காக தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மளிகை பொருட்களும் தள்ளுவண்டிகளில் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்

இந்த நிலையில் ஜூன் மாதம் முதல் வாரம் வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஜூன் மாதம் 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விலையில்லாமல் இலவசமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வரின் உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:

பொது மக்களின்‌ சிரமத்தை குறைக்கும்‌ வகையில்‌, 13 மளிகைப்‌ பொருட்கள்‌ அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்‌ கடைகள்‌ மூலம்‌, வரும்‌ ஜூன்‌ மாதம்‌ முதல்‌ வழங்கிட, கூட்டுறவு மற்றும்‌ நுகர்வோர்‌ பாதுகாப்புத்‌ துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

From around the web