ஜூன் 21 முதல் இலவசம்: பிரதமர் அறிவிப்பு

 
modi

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜூன் 21 முதல் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நேற்று அவர் பேசியபோது கொரோனாவை தடுக்க தடுப்பூசியே பேராயுதம் என்றும் தடுப்பூசியே துணை என்றும் எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். மூக்கில் செலுத்தும் தடுப்பூசி உள்பட மேலும் 3 தடுப்பூசிகள் தற்போது பரிசோதனையில் உள்ளதாக தெரிவித்த அவர், ஜூன் 21 முதல் மாநிலங்களுக்கு மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி வழங்கும் என்று தெரிவித்தார்

மேலும் தீபாவளி வரை ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகளில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என்று தெரிவித்த பிரதமர், ஊரடங்கு குறித்து முடிவு எடுப்பதை மாநில அரசுகளுக்கே விட்டுள்ளோம் என்றும் கூறினார். மேலும் நாட்டில் உற்பத்தியாகும் தடுப்பூசிகள் குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

From around the web