இலவசம் இலவசம் அனைவருக்கும் இலவசம் மக்கள் மகிழ்ச்சி!

டெல்லியில் உள்ள அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று கூறியுள்ளார் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!
 
இலவசம் இலவசம் அனைவருக்கும் இலவசம் மக்கள் மகிழ்ச்சி!

இந்தியாவின் தலைநகரமாக உள்ளது டெல்லி. டெல்லி மாநகரில் இந்தியாவின் முதல் நீதிமன்றமான உச்ச நீதிமன்றம் உள்ளது. எனினும் டெல்லி மாநகரில் உயர்நீதிமன்றமும் உள்ளது. மேலும் உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றம் பெற்றுள்ள ஒரே நகரம் டெல்லி என்ற சிறப்பினையும் பெற்றுள்ளது. தலைநகரமான டெல்லியில் சில தினங்களாக ஆட்கொல்லி நோயான கொரோனா  தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் கொரோனா  நோயினால் உயிரிழப்புகளும் அங்கு அதிகமாக காணப்படுகிறது. மேலும் இதற்காக டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.covaxin

அதன்படி டெல்லியில் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்று அவர் கூறினார். மேலும் அவர் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை என்றும் அறிவித்திருந்தார். மேலும் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளை திறக்க வேண்டாம் என்றும் கூறியிருந்தார். கொரோனா தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது தேவைப்படும் ஆக்சிசன் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. மேலும் அவர் சில தினங்கள் முன்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆக்சிசன் தேவைக்காக கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் கூறியுள்ளார்,டெல்லியில் அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். 18 வயது நிரம்பிய அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இத்தகைய சூழலில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அம்மாநில மக்களை மிகுந்த சோகத்தில் தள்ளியுள்ளது.

From around the web