ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச கல்வி வாய்ப்பு-"சென்னை ராமகிருஷ்ணா மிஷன்"

கொரோனா உள்பட பல காரணங்களால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச கல்வி வாய்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
ramakrishna

தற்போது நம் இந்தியாவில் பல அனாதை ஆசிரமங்கள் பல முதியோர் இல்லங்களும் அதிகமாக காணப்படுகின்றன. காரணம் நாளுக்கு நாள் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் இறப்பு அதிகமாக காணப்படுகின்றன. குறிப்பாக சிறு குழந்தைகளின் பெற்றோர்கள் வாகன விபத்தில் உள்ளாவதும் வேறு சிலர் தற்கொலை மற்றும் பலர் உடல் நலக் குறைஉள்ளாவதும் நாளுக்கு நாள் நம் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. இதனால் அவர்களின் பிள்ளைகள் பெற்றோர் இன்றி தவிக்கின்றனர். மேலும் பல பகுதிகளில் இந்த குழந்தைகள் பெற்றோர் இன்றி தங்களுக்கு படிப்பின் கனவையும் கனவாகவே நினைத்து வாழ்கின்றனர்.children

மேலும் பல குழந்தைகளும் குழந்தை தொழிலாளர்களாக வருகின்றனர். இந்த காலகட்டத்திலும் பல பெற்றோர்களை இழந்த பிள்ளைகள் தவிக்கின்றனர். அவர்களுக்கு அவ்வப்போது நிதி உதவிகளும் வழங்கப்படுகிறது. ஆயினும் அவர்கள் கல்வியின் தரமானது கேள்விக்குறியாக உள்ளது.  தற்போது ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச கல்வி வாய்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கொரோனா உள்பட பல காரணங்களால் பெற்றோரை இழந்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச கல்வி வாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இதில் ஆறாம் வகுப்பு, பாலிடெக்னிக் கல்வி நிறுவனத்தால் பட்டயப் படிப்பை தொடர சென்னை ராமகிருஷ்ணா மிஷன் வாய்ப்புள்ளது. மேலும் ஏழை எளிய மாணவர்களும் இந்த திட்டத்தின் கீழ் இலவச கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வியை பெறலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு இலவச கல்வியுடன் உணவு தங்குமிட வசதியும் ராமகிருஷ்ணா மிஷன் வழங்குகிறது. மேலும் ஐந்தாம் வகுப்பு தேறியவர்கள் ஆறாம் வகுப்பிலும், பத்தாம் வகுப்பு தேறியவர்கள் பாலிடெக்னிக் படிப்பிலும் நேரடியாக சேரலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் 12 வகுப்புகள் பட்டய படிப்பில் இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்ந்து படிக்கலாம் என்று ராமகிருஷ்ணா மிஷன் கூறியுள்ளது. மேலும் 2021 ஆம் ஆண்டுக்கான இலவச கல்வி பயில பதிவு செய்ய இணையதளத்தையும் ராமகிருஷ்ணா மிஷன் அறிவித்துள்ளது.

From around the web