மூன்று மாதங்களுக்குப் பின் திருப்பதி கோவிலில் இலவச தரிசனம்: அதிகாரபூர்வ அறிவிப்பு 

 

கொரொனா வைரஸ் பாதிப்பு காரணமாக திருப்பதி கோவில் உள்பட நாடு முழுவதும் உள்ள கோவில்கள் கடந்த மார்ச் மாதத்திலிருந்து மூடப்பட்டிருந்தன

இந்த நிலையில் சமீபத்தில் கோவில்கள் திறக்கவும் வழிபாடு நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து பக்தர்கள் ஒரு சில நிபந்தனைகளுடன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர் 

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் இலவச தரிசனம் அனுமதிக்கப்படுவதாக திருப்பதி கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூன்று மாதத்திற்கு பிறகு நாளை முதல் தினமும் 3000 இலவச தரிசன டோக்கன் கள் வழங்கப்பட உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

From around the web