நீட் தேர்வு மாணவர்களுக்கு இலவச பஸ் வசதி: முதல்வர் அறிவிப்பு

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற திட்டமிட்டுள்ள நிலையில் இந்தத் தேர்வை நடத்த கூடாது என பல மாநில முதலமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர் இருப்பினும் தேசிய தேர்வு முகமை நீட் மற்றும் ஜே.ஈ.ஈ. தேர்வு நடத்தியே தீருவது என்று கூறுவதோடு, தேர்வு நடத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது இந்த நிலையில் சட்டீஸ்கர் முதல்வர் சற்று முன்னர் அறிவித்த ஒரு அறிவிப்பில் ’நீட்
 

நீட் தேர்வு மாணவர்களுக்கு இலவச பஸ் வசதி: முதல்வர் அறிவிப்பு

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற திட்டமிட்டுள்ள நிலையில் இந்தத் தேர்வை நடத்த கூடாது என பல மாநில முதலமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

இருப்பினும் தேசிய தேர்வு முகமை நீட் மற்றும் ஜே.ஈ.ஈ. தேர்வு நடத்தியே தீருவது என்று கூறுவதோடு, தேர்வு நடத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது

இந்த நிலையில் சட்டீஸ்கர் முதல்வர் சற்று முன்னர் அறிவித்த ஒரு அறிவிப்பில் ’நீட் மட்டும் ஜே.ஈ.ஈ. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவசப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் அனைத்து கலெக்டர்களுக்கும் பிறப்பித்த உத்தரவில் அந்தந்த மாவட்டத்தில் நீட் மற்றும் ஜே.ஈ.ஈ. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மையத்திற்கு செல்ல தேவையான பேருந்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு அந்தப் பேருந்து இலவசமாக செயல்படவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்

மாணவர்கள் பேருந்தில் ஏறும் போது தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை காண்பித்தால் டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

From around the web