திருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கு: மேலும் 4 பேர் கைது

திருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கில் நேற்று மேலும் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது திருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கில் திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் உட்பட 12 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே. கைதான இதயவர்மன் உள்பட 12 பேர்களையும் நீதிமன்ற காவலைல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது இந்த நிலையில் இதுவரை இதயவர்மன் தரப்பினர் மட்டுமே கைதான நிலையில் நேற்று திருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கில்
 

திருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கு: மேலும் 4 பேர் கைது

திருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கில் நேற்று மேலும் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

திருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கில் திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் உட்பட 12 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே. கைதான இதயவர்மன் உள்பட 12 பேர்களையும் நீதிமன்ற காவலைல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது

இந்த நிலையில் இதுவரை இதயவர்மன் தரப்பினர் மட்டுமே கைதான நிலையில் நேற்று திருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் குமார் உள்பட அவரது தரப்பினர் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் இருதரப்பிலும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் திருப்போரூர் அருகே துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இன்று மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதுமட்டுமின்றி திருப்போரூர் காவல் நிலைய தலைமை காவலர் சந்திரசேகர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

From around the web