லடாக் மோதல்: மேலும் 4 இந்திய வீரர்கள் கவலைக்கிடமா?

நேற்று முன்தினம் நள்ளிரவு இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே லடாக் எல்லையில் உள்ள கால்வான் என்ற பகுதியில் நடந்த மோதல் காரணமாக பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது இந்த மோதலில் இந்திய தரப்பில் இருந்து 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாகவும் சீனா தரப்பில் 43 வீரர்கள் பலியாகி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இருப்பினும் சீனா தனது தரப்பு உயிரிழப்பை இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இந்த மோதல் காரணமாக
 

லடாக் மோதல்: மேலும் 4 இந்திய வீரர்கள் கவலைக்கிடமா?

நேற்று முன்தினம் நள்ளிரவு இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே லடாக் எல்லையில் உள்ள கால்வான் என்ற பகுதியில் நடந்த மோதல் காரணமாக பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது

இந்த மோதலில் இந்திய தரப்பில் இருந்து 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாகவும் சீனா தரப்பில் 43 வீரர்கள் பலியாகி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இருப்பினும் சீனா தனது தரப்பு உயிரிழப்பை இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த மோதல் காரணமாக படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய வீரர்களில் 4 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வழியில் வெளிவந்துள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் இரு நாட்டில் எல்லைகளில் அமைதியை மேம்படுத்த இரு நாட்டுப் படைகளும் வாபஸ் பெற்று விட்டதாகவும் மேலும் இருநாட்டு ராணுவ அதிகாரிகள் தரப்பில் பேச்சு வார்த்தை நடத்த சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது

சீன எல்லையில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களின் மோதலால் இரு நாட்டு எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web