பிரபல அரசியல் கட்சியில் முக்கிய பதவிகளை பெற்ற தமிழ் நடிகைகள்

தமிழ் சினிமாவுக்கும் அரசியலுக்கும் மிக நெருங்கிய சம்பந்தம் உண்டு என்பதும் அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, சிவாஜி கணேசன், ரஜினி, கமல் உள்பட பல நடிகர்கள் அரசியலில் ஈடுபட்டு வந்தனர் என்பதும் வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தேசிய கட்சியான பாஜகவில் ஏற்கனவே ஒரு சில நடிகர் நடிகைகள் பதவிகள் பெற்றுள்ள நிலையில் தற்போது மேலும் நான்கு நடிகைகளுக்கு பாஜகவின் முக்கிய பதவிகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது சற்று முன்னர் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன்
 

பிரபல அரசியல் கட்சியில் முக்கிய பதவிகளை பெற்ற தமிழ் நடிகைகள்

தமிழ் சினிமாவுக்கும் அரசியலுக்கும் மிக நெருங்கிய சம்பந்தம் உண்டு என்பதும் அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, சிவாஜி கணேசன், ரஜினி, கமல் உள்பட பல நடிகர்கள் அரசியலில் ஈடுபட்டு வந்தனர் என்பதும் வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தேசிய கட்சியான பாஜகவில் ஏற்கனவே ஒரு சில நடிகர் நடிகைகள் பதவிகள் பெற்றுள்ள நிலையில் தற்போது மேலும் நான்கு நடிகைகளுக்கு பாஜகவின் முக்கிய பதவிகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

சற்று முன்னர் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் அவர்கள் பாஜகவின் புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்களாக நடிகைகள் நமீதா, குட்டி பத்மினி, கவுதமி மற்றும் மதுவந்தி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக அவர் அறிவித்துள்ளார்

மேலும் சமீபத்தில் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விபி துரைசாமி, பாஜக மாநிலத் துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்களாக பதவியைப் பெற்ற நான்கு நடிகைகள் பாஜகவின் வளர்ச்சிக்கு உதவுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web