சிங்கம் சின்னத்தில் களமிறங்க உள்ளது பார்வர்ட் பிளாக் கட்சி!

சட்டமன்ற தேர்தலில் பார்வர்ட் பிளாக் கட்சிக்கு சிங்கம் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!
 

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அதற்காகப் பல்வேறு கட்சிகள் தமது கொள்கைகளையும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவுடன் கூட்டணியாக பாஜக  பாமக கட்சியும் வைத்துள்ளது.எதிர்கட்சியான திமுக கட்சி தன்னுடன் கூட்டணியாக காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் வைத்துள்ளது.

forward bloc

எந்த ஒரு  கூட்டணியுமின்றி 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் தனித்து அறிவித்து மற்ற கட்சிகளை மிரள வைத்துள்ளது நாம் தமிழர் கட்சி. 234 வேட்பாளர்களில் 117 ஆண்  வேட்பாளர்களும் 117 பெண் வேட்பாளர்கள் உள்ளனர்.இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் .

தேர்தல் ஆணையம்  தற்போது ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு, கேரளா தேர்தலில் பார்வர்ட் பிளாக் கட்சிக்கு சிங்கம் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. மேலும் பார்வர்ட் பிளாக் கட்சி சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளதால் அக்கட்சிக்கு சிங்கம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

From around the web