மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி..!

கடந்த 2014ல் பாஜக முதல் முறையாக ஆட்சி அமைத்த போது நிதி அமைச்சராக பொறுப்பேற்றவர் அருண் ஜெட்லி. மேலும், தகவல் ஒளிப்பரப்புத்துறை, பாதுகாப்புத் துறை மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் போன்றவற்றிலும் அவர் அமைச்சராக பதவி வகித்துள்ளார். இந்நிலையில், அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. பல ஆண்டுகளாக சிசிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து 2018, மே மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். இதற்கிடையில் மே 14ம் தேதி அவருக்கு சிறுநீரக
 

கடந்த 2014ல் பாஜக முதல் முறையாக ஆட்சி அமைத்த போது நிதி அமைச்சராக பொறுப்பேற்றவர் அருண் ஜெட்லி. மேலும், தகவல் ஒளிப்பரப்புத்துறை, பாதுகாப்புத் துறை மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் போன்றவற்றிலும் அவர் அமைச்சராக பதவி வகித்துள்ளார். 


இந்நிலையில், அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. பல ஆண்டுகளாக சிசிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து 2018, மே மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி..!இதற்கிடையில் மே 14ம் தேதி அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அதிலிருந்து முற்றிலும் குணமடைந்தார் அருண் ஜெட்லி.

2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் தேதி அப்போது உடல்நலமின்மையால், நிதி அமைச்சகப் பொறுப்பு பியூஷ் கோயலுக்கு வழங்கப்பட்டது. அருண் ஜெட்லி இலாக்கா இல்லாத மத்திய அமைச்சராக அறிவிக்கப்பட்டார். 

இந்தியாவில் மக்களவை தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், அருண் ஜெட்லி ராஜினாமா செய்தார்.


2019 ஆம் ஆண்டின் புதிய அமைச்சரவையில் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.


இந்நிலையில் அருண் ஜெட்லிக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவருடைய உடல்நலம் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

From around the web