முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக உள்ளது- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!

கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெறும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது!
 
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக உள்ளது- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!

எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலை மாறி தற்போது எங்கும் கொரோனா எதிலும் கொரோனா என்ற நிலைக்கு இவ்வுலகமே தள்ளப்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது.ஆனால் இந்தியாவின் தைரியமான முயற்சியினால் கொரோனா நோயானது கடந்த ஆண்டின் இறுதிக்குள் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. காரணம் இந்தியாவானது நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தியது. அதனால் இந்நோயானது கட்டுப்படுத்தப்பட்டது.கொரோனா மீண்டும் எழுந்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் மெட்ரோ சிட்டி  மும்பை டெல்லி சென்னையில் இந்நோயின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

harsh vardhan

மேலும் பல்வேறு தலைவர்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் போன்றோருக்கும் கொரோனா நோயின் அறிகுறியானது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கின்றனர். மேலும் தமிழகத்தில் அரசியல் கட்சியினர் பலரும் கொரோனா  கண்டறியப்பட்டது. சில தினங்களுக்கு முன்பாக பாரத இந்தியாவின் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங்கிற்கு கொரோனா கண்டறியப்பட்டது. அவர் அதற்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மேலும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தான் பாரத பிரதமர் நரேந்திர மோடி இரண்டு முறை கொரோனா தடுப்பூசி போட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் டெல்லி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் கொரோனா இருந்ததும் கண்டறியப்பட்டது. அந்த மருத்துவமனையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவரின் உடல் நிலை சீராக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார்.

From around the web