கொரோனாவில் இருந்து மீண்டு வந்தார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தற்போது குணமடைந்து வீடு திரும்பினார்!
 
கொரோனாவில் இருந்து மீண்டு வந்தார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்!

தற்போது இந்தியாவெங்கும் மிகவும் அலை போன்று பரவியதே கொரோனா வைரஸ். கொரோனா எதிராக நாடே மிகவும் போராடுகிறது. மேலும் மத்திய அரசின் சார்பில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் கொண்டு செல்லப்படுகின்றன. எனினும் பல பகுதிகளில் இன்னும் கொரோனா தடுப்பூசியின் பற்றாக்குறை நிலவுவது அவ்வப்போது தெரிகிறது. மேலும் இந்த நோய்க் கிருமியானது பாரபட்சமின்றி அனைவருக்கும் பரவுவது மிகுந்த வேதனை அளிக்கிறது.corona

மேலும் பல அரசியல் தலைவர்களுக்கும் கொரோனா நோய்க் கிருமியின் தாக்கம் காணப்படுவது தெரிய வந்தது. இந்நிலையில் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. அதன்பின்னர் அவர் தனிமைப் படுத்திக் கொண்டார். மேலும் பல அரசியல் தலைவர்களுக்கும் இந்த கொரோனா நோயின் கிருமி தாக்கம் கண்டறியப்பட்டது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

அதனால் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குணமடைந்து வீடு திரும்பினார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர் ஏப்ரல் 19ம் தேதியில் கொரோனா உறுதியான நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் சிகிச்சை முடிந்து தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.மேலும் இதுபோன்று பலரும் கொரோனா சிகிச்சையில் வெற்றி பெற்று குணமடைந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web