முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி சற்றுமுன் காலமானதாக அவரது மகன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால், டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரணாப் முகர்ஜி அவர்கள் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 84 இந்திய தேசம் தனது தகுதியான மகன்களில் ஒருவரை இழந்துவிட்டதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் பிரணாப் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார். பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி நாட்டின் வளர்ச்சியில் நிரந்தரமான தடத்தை பதிவு செய்துள்ளார்
 
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி சற்றுமுன் காலமானதாக அவரது மகன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால், டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரணாப் முகர்ஜி அவர்கள் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 84

இந்திய தேசம் தனது தகுதியான மகன்களில் ஒருவரை இழந்துவிட்டதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் பிரணாப் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார். பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி நாட்டின் வளர்ச்சியில் நிரந்தரமான தடத்தை பதிவு செய்துள்ளார் என்றும் தேசத்தின் வளர்ச்சியில் அழிக்க முடியாத முத்திரையை பதித்து சென்றுள்ளார் என்றும் பிரணாப் முகர்ஜி மறைவு குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அதேபோல் பிரணாப் முகர்ஜியின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது என்றும், பிரணாப் முகர்ஜியை இழந்துவாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மிகுந்த பக்தியுடன் தேசத்திற்கு சேவை புரிந்தவர் பிரணாப் முகர்ஜி என்று பிரணாப் முகர்ஜி மறைவு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். நாட்டின் கலாசாரம், பண்பாட்டை முன்னிறுத்தியவர் பிரணாப் முகர்ஜி என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

From around the web