அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ்!

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடல், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11.20 மணிக்கு சுஷ்மா மண்ணைவிட்டு மறைந்தார். சுஷ்மா உடலுக்கு பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர். மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர்
 

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடல், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. 


முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11.20 மணிக்கு சுஷ்மா மண்ணைவிட்டு மறைந்தார். 

சுஷ்மா உடலுக்கு பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர். மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். 

அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ்!இறுதி அஞ்சலி முடிந்ததும் டெல்லியில் உள்ள லோதி மயானத்திற்கு சுஷ்மா உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அங்கு, அவரது உடலுக்கு இறுதி சடங்குகுகள் செய்யப்பட்ட பின்பு, துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் சுஷ்மா சுவராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது. 


சுஷ்மா சுவராஜ் மறைவை அடுத்து டெல்லியில் 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதேபோன்று ஹரியானா அரசும் 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவித்துள்ளது. 

From around the web