முன்னாள் அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் மனைவி கொலை!

 
kitty kumaramangalam

தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் அவர்களின் மனைவி கிட்டி குமாரமங்கலம் டெல்லியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம். இவர் கடந்த 2000 ஆண்டு காலமான நிலையில் அவரது மனைவி கிட்டி குமாரமங்கலம் டெல்லியில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு கிட்டி குமாரமங்கலம் தங்கியிருந்த வீட்டில் திடீரென கொள்ளை நடந்ததாகவும், கொள்ளை முயற்சியை கிட்டி குமாரமங்கலம் தடுக்க முயற்சித்த போது அவர் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது 

இந்த கொலை சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் இருவரை போலீசார் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்று காலை பணிப்பெண் கொடுத்த தகவலின்படி காவல்துறையினர் குமாரமங்கலம் வீட்டிற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் 

மேலும் இது குறித்த விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர் என்பதும் தலைமறைவாக உள்ள இரண்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தலைநகர் டெல்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரின் மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web