முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் மனு தள்ளுபடி!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனு தள்ளுபடி
 
manikandan

சில தினங்களாகவே ஊடகங்களில் அதிகமாக பேசப்பட்டு வந்தவர் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர். அதன்படி அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது துணை நடிகை ஒருவர் புகார் அளித்துள்ளார். அதன்படி நாடோடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மக்கள் இடையே அதிகமாக பேசப்பட்டு வந்த நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது விசாரணை தொடர்ந்து நடக்கிறது. மேலும் இவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.santhini

இவர் நடிகையை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது வழக்கை விசாரித்து அவருடன் தனிப்படை மூலம் சென்னையிலிருந்து ராமநாதபுரம் சென்று காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில் தற்போது அவர் மீது வழக்கு பதிவாகி உள்ளது. மேலும் தற்போது முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தரப்பிலிருந்து ஜாமீன் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் தற்போது முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம். மேலும் அவர் நடிகையை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கூறி வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் மறுத்து உள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் இவரின் விசாரணை இன்னும் முடியவில்லை எனவே தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க முடியாது என்று வழக்கை விசாரித்த நீதிபதி செல்வகுமார் கூறியுள்ளார்.

From around the web