இன்று பாஜகவில் இணைகிறார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை: பரபரப்பு தகவல்

கடந்த சில மாதங்களாகவே பாஜகவில் திரையுலக பிரபலங்கள், மாற்று கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஆகியோர் பாஜகவில் இணைவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை இன்று பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். அவர் பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வந்தார்
 
இன்று பாஜகவில் இணைகிறார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை: பரபரப்பு தகவல்

கடந்த சில மாதங்களாகவே பாஜகவில் திரையுலக பிரபலங்கள், மாற்று கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஆகியோர் பாஜகவில் இணைவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை இன்று பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். அவர் பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வந்தார் என்பதும் அவர் அளித்த பேட்டியில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்தார் என்பம்து குறிப்பிடத்தக்கது

எனவே அவர் பாஜகவில் விரைவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் எதிர்பார்ப்பின்படியே முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை இன்று காலை 11 மணிக்கு பாஜகவில் இணைய இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளது

டெல்லியில் இன்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் அண்ணாமலை பாஜகவில் இணைய இருப்பதாகவும், அப்போது தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்களும் உடன் இருப்பார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை இணைப்பால் தமிழகத்தில் தாமரை மலருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

From around the web