முதலமைச்சருக்கு முன்னாள் துணை முதலமைச்சர் நன்றி!!!

தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்!
 
ops

தற்போது தமிழகத்தின் முதல்வராக உள்ளார் திமுக கட்சியின் தலைவரான மு க ஸ்டாலின். முதன் முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சி  காங்கிரஸ் போன்ற பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து  ஆட்சி செய்கிறது என்றும் கூறலாம். தற்போது நம் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக வந்துள்ளது. முந்தைய ஆளும் கட்சியான அதிமுக மேலும் அப்போது அதிமுக கட்சியின் முதல்வராக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி.ops

அதிமுக கட்சியின் யார் முதலமைச்சர் வேட்பாளராக இருப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் அவர் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். இந்நிலையில் முன்னாள் முந்தைய துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தற்போது முதல்வர் முக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் 2020ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வூதியம் பலன்களை வழங்க நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் ஒதுக்கப்பட்ட நிதியை உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்க முதல் அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். இதனால் அவர் கூறிய தகவலை தற்போது நடைமுறைப்படுத்தி இருந்ததால் அவருக்கு ஓ பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார், நன்றி தெரிவித்துள்ளார்.

From around the web