காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கைது!

 

உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஹத்ராஸ் என்ற பகுதியில் சமீபத்தில் இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இதனை அடுத்து பாலியல் வன்கொடுமையால் இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் சற்று முன்னர் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு காரில் சென்றனர் 

ஆனால் அவர்கள் சென்ற கார் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டதை அடுத்து வரும் இளம் பெண்ணின் பெற்றோர் வீட்டிற்கு நடந்தே இருவரும் சென்றனர் 

இந்த நிலையில் ஹத்ராஸ் செல்லும் வழியில் போலீசார் தன் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தன்னை கீழே தள்ளி விட்டு அடித்ததாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ஹத்ராஸ் நோக்கி நடை பயணம் செய்த ராகுல் காந்தி கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 

இந்த தகவலால் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் பெரும் பரபரப்பு அடைந்துள்ளனர் ராகுல் காந்தியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் போராட்டம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தொற்றுநோய் தடுப்பு சட்டப்படி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரையும் ஹத்ராஸ் பகுதிக்குள் அனுமதிக்க முடியாது என காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

From around the web