ராமர் கோவில் தீர்ப்பு வழங்கிய முன்னால் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிக்கு கொரோனா: அதிர்ச்சித் தகவல்

அயோத்தி ராமர் கோயில் விவகாரம் குறித்த வழக்கு கடந்த பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில் இந்த வழக்கை முடித்து வைத்து தீர்ப்பு வழங்கிய அமர்வில் இருந்தவர்களில் ஒருவர் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இவருக்கு கடந்த சில நாட்களாக அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன இதனையடுத்து தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல்
 

ராமர் கோவில் தீர்ப்பு வழங்கிய முன்னால் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிக்கு கொரோனா: அதிர்ச்சித் தகவல்

அயோத்தி ராமர் கோயில் விவகாரம் குறித்த வழக்கு கடந்த பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில் இந்த வழக்கை முடித்து வைத்து தீர்ப்பு வழங்கிய அமர்வில் இருந்தவர்களில் ஒருவர் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

இவருக்கு கடந்த சில நாட்களாக அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன இதனையடுத்து தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல் சீரான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ராமர் கோயில் வழக்கில் தீர்ப்பை வழங்கிய நிலையில் அதனை அடுத்த சில மாதங்களில் அவர் ஓய்வுபெற்றார். ஓய்வுக்குப் பின் அவர் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இன்று ராமர் கோவிலுக்கு பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் தினத்தில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

From around the web