மீண்டும் தொடங்கியது மதுரையில் இருந்து வெளிநாட்டு விமான சேவை!!

மதுரையில் இருந்து துபாய்க்கு வெளிநாட்டு விமான சேவை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது
 
airplane

தற்போது இந்தியாவில் சில தினங்களாக கொரோனா நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இதன் விளைவாக பல மாநில அரசுகள் அவர்கள் மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு  திரும்பப் பெற்றுள்ளனர். இதற்கு முன்னதாக சில மாதங்கள் வரையில் இந்தியாவில் இந்த நோயின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. இதன் விளைவாக இந்தியாவுடன் பல நாடுகள் விமான போக்குவரத்து சேவையை சில மாதங்களுக்கு தடைசெய்து இருந்தன. அவற்றில் குறிப்பாக நியூசிலாந்து சில மாதங்களுக்கு முன்பு வரை  இந்தியாவுடன் இருந்த விமான போக்குவரத்து சேவையை முற்றிலுமாக ரத்து செய்து இருந்தன.madurai airport

அதை தொடர்ந்து ஆஸ்திரேலியா மற்றும் துபாய் போன்ற பல நாடுகள் இந்தியாவுடன் விமான போக்குவரத்து சேவையை ரத்து செய்து இருந்தனர். தற்போது மீண்டும் விமான போக்குவரத்து சேவை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. ஜூலை 1ம் தேதி முதல் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜூலை 1ம் தேதி முதல் மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்கு மீண்டும் விமானங்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் ஜூலை 1ம் தேதி முதல் மதுரை விமான நிலையத்தில் இருந்து மீண்டும் துபாய்க்கு விமான சேவையை தொடங்க உள்ளது என ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் பயணிகளிடம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் மற்றும் இரண்டு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட சான்றிதழ் உள்ளிட்டவை கட்டாயமாக இருக்கவேண்டும் என்றும் கூறப்படுகிறது. இதனால் மீண்டும் விமான சேவை தொடங்கியது மக்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web