தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிலும் நாளை முதல் அமலுக்கு வர உள்ளது!

தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிலும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் பெற உள்ளதாக கேரள உயர்மட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர்!
 
தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிலும் நாளை முதல் அமலுக்கு வர உள்ளது!

மக்கள் மத்தியில் தற்போது காணப்படுகின்ற மிகப்பெரிய ஆட்கொல்லி நோய் கொரோனா.அனைத்து தரப்பு மக்களையும் பாரபட்சமின்றி பாதித்து அவர்களின் வாழ்வாதாரங்களை மிகவும் பாதித்தது. மேலும் கொரோனா உலக நாடுகள் அனைத்திலும் பரவியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த கொரோனாவானது கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் கட்டுப்பாடு வரத் தொடங்கிய பின்னர் கடந்த ஆண்டின் இறுதியில் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. ஆனால் தற்போது மீண்டும் கொரோனா அதிகரித்துள்ளது மிகுந்த சோகத்தை அளிக்கிறது.

lockdown

குறிப்பாக இந்தியாவில் டெல்லி மகாராஷ்டிரம் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இந்நோயின் தாக்கமானது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து மக்களை வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது. இந்நிலையில் சில மாநிலங்கள் அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. மேலும் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்த உள்ளன. அதன்படி தமிழகத்தில் நாளைய தினம் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவிலும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்த உள்ளதாக அம்மாநில உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த இரவு நேர ஊரடங்கு இரவு 9 மணி தொடங்கி காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்று கேரள அரசின் சார்பில் கூறியுள்ளது. மேலும் போக்குவரத்து பொதுப் போக்குவரத்துக்கு தடை இல்லை என்றும் கேரள உயர் மட்ட அதிகாரிகள் ஆலோசனையில் முடிவு என தகவல் வெளியாகி உள்ளது. இதுபோன்ற தமிழகத்தை  சட்டமன்றத் தேர்தலும் ஒரே தினத்தில் கேரளாவில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

From around the web