கர்நாடகாவை தொடர்ந்து ஆந்திராவிலும் தலைமறைவு!திருப்பதிக்கே லட்டு கொடுத்தனர்!

திருப்பதியில் 1049 கொரோனா நோயாளிகள் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது!
 
கர்நாடகாவை தொடர்ந்து ஆந்திராவிலும் தலைமறைவு!திருப்பதிக்கே லட்டு கொடுத்தனர்!

சில நாட்களாக மக்கள் மனதில் மிகவும் அச்சத்தை ஏற்படுத்தி காணப்படுகிறது கொரோனா. காரணம் இந்த கொரோனா நோயானது மனிதனின் கண்ணுக்கு தெரியாமல் மனித உடலுக்குள் சென்று மனிதனுக்கு பல்வேறு இன்னல்களை தருகிறது.கொரோனா எதிராக பல்வேறு மாநிலங்களிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.ஆயினும் இந்த கொரோனா நோயின் தாக்கம் ஆனது கட்டுப்படுத்த முடியவில்லை என்பது உண்மைதான். மேலும் இதற்கு எதிராக பல்வேறு முறைகளில் மக்கள் போராடுகின்றனர்.corona

உதாரணமாக மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து, கொரோனா  தங்களுக்கு வராமல் தடுப்பதற்கு சமூக இடைவெளியை பின்பற்றியும் கொரோனா எதிராக போராடுகின்றனர். இன்னும் கொரோனா அதிகமாக காணப்படுகிறது,அதைவிட கொடுமையான சம்பவம் என்னவென்றால் இந்நோயின் தாக்கம் கண்டவுடன்  அவர்கள் தலைமறைவாக மிகுந்த வேதனை அளிக்கிறது. இச்சம்பவம் தற்போது திருப்பதியில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதன்படி திருப்பதியில் 1049 பேர் கொரோனாநோயாளிகள் தலைமறைவாகியுள்ள பரபரப்பை உருவாக்கியது.

மேலும் பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் என கொரோனா உறுதி செய்யப்பட்ட போது அவர்கள் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அந்த நோயாளிகளின் செல்போன் முகவரி உள்ளிட்டவை சோதித்ததில் பெரும்பாலானவை போலி என தெரியவந்துள்ளது என்றும் தலைமறைவான அவர்கள் வீடு திரும்பாமல் சுற்றித்திரியும் நிலையில் மற்றவர்களுக்கும் இந்த கொரோனா பாதிப்பு அபாயம் உள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும் நேற்றைய தினத்தில் பெங்களூருவில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது அப்பகுதியை பதற வைத்தது குறிப்பிடத்தக்கது.

From around the web