அதிமுக, திமுகவை அடுத்து தேமுதிகவின் முக்கிய அறிவிப்பு: விஜயகாந்த் அறிவிப்பு

தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த மாத இறுதியில் தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இதனை அடுத்து அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன என்பதும், தேர்தல் பிரச்சாரத்தையும் அரசியல் கட்சி தலைவர்கள் தொடங்கி விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுவை விண்ணப்பிக்கலாம் என சமீபத்தில் அறிவித்த நிலையில் தேர்தலில் போட்டியிடுபவர்கள் விண்ணப்பத்தை வாங்கி சென்று வருகின்றனர்
இந்த நிலையில் அதிமுக, திமுகவை அடுத்து தேமுதிகவும் விருப்ப மனு அளிக்கலாம் என அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 25ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அடுத்து தேமுதிக தலைமை அலுவலகமும் சுறுசுறுப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது