வேலூரில் விபத்தில் சிக்கிய பறக்கும் படை! பெண் காவலர் பலி!

வேலூரில் தேர்தல் பறக்கும் படை வாகனம் மீது லாரி மோதியதில் பெண் காவலர் உயிரிழந்ததாக தகவல்!
 

நாளைய தினம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் வேகமாக  வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன.234 தொகுதிகளிலும் தேர்தல் வேலை மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையம் ஆனது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு உத்தரவுகளையும் விதிமுறைகளையும் விதித்துள்ளனர்.

election

மேலும் தேர்தல் பறக்கும் படையினர் தமிழகம் முழுவதும் வாகன பரிசோதனையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்கள் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் நகைகளையும் பணத்தையும் பறிமுதல் செய்தும் வருகின்றனர். தற்போது தேர்தல் பறக்கும் படையினர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் அனைவரையும் சோகத்தில் ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம் கே வி குப்பம் பகுதியில் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சென்ற கார் மீது லாரி மோதியதாக  தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த விபத்தில் பெண் தலைமைக் காவலர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விபத்தில் வேலூர் மாவட்டம் வடக்கு காவல் நிலைய தலைமை காவலர் மாலதி பலியானதாகவும் மேலும் 3 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் தற்போது விபத்தானது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது.

From around the web