பூக்கள் விலை கிடுகிடு உயர்வு! மக்கள் அதிர்ச்சி! நாளை சித்திரை திருவிழா!

சித்திரை திருவிழாவை ஒட்டி தோவாளை பூக்கள் சந்தையில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது
 
பூக்கள் விலை கிடுகிடு உயர்வு! மக்கள் அதிர்ச்சி! நாளை சித்திரை திருவிழா!

ஒவ்வொருவரின் வீட்டிலும் வாசனைக்காக பல்வேறு வாசனை திரவியங்கள் பல்வேறு வாசனை பவுடர்கள் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வாசனை திரவியங்கள் மற்றும் வாசனை பொருட்கள் ஆகிய அனைத்தும் நமக்கு பூக்களில் இருந்து தான் வருகிறது என்பது ஒரு சிலருக்கு தெரியாது. உலகில் கோடிக்கணக்கான பூக்கள் இனங்கள் உள்ளன. மேலும் ஒவ்வொரு பூக்களும் ஒவ்வொரு நறுமணத்தில் உள்ளன. மேலும் அந்த பூக்களிலிருந்து தேனீக்கள் தேனை நுகர்வதும் குறிப்பிடத்தக்கது.

flowers

 வாசனைதிரவியம், வாசனைப் பொருளாக பயன்படுத்தப்படும் இந்த பூக்கள் ஆனது ஒவ்வொரு விழாக்களிலும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது .மேலும் பூக்கள் இல்லாத எந்த ஒரு நிகழ்ச்சியும் கிடையாது என்பதும் மறுக்க முடியாத உண்மைதான்.  தமிழகத்தில் நாளை தினம் தமிழ் புத்தாண்டு பிறக்க உள்ளது. மேலும் தமிழ் புத்தாண்டு வீடுகளில்  விசு கனி காணும் விழாவும் உள்ளது. இதற்காக பூக்கள் பயன்படுத்துவர்.  தற்போது கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை சந்தையில் பூக்களின்  விலையானது மிகவும் அதிகமாக உயர்ந்துள்ளதாக காணப்படுகிறது.

நேற்றைய தினம் இன்றையதினம் பூக்களின் விற்பனையும், பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து நேற்று கிலோ ஒன்றுக்கு 850 பிச்சிப்பூ விற்கப்பட்டது ஆனால் இன்றைய தினம்  1750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒன்றுக்கு 300 நிலையில் இன்று 600 ஆக அதிகரித்துள்ளது. வாடாமல்லி நேற்றைய தினம் ரூபாய் 30க்கு விற்ற நிலையில் தற்போது 50 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அரளிப்பூ கிலோ 140 லிருந்து இன்றையதினம் கிலோ 200 ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது. இதனால் இதனை வாங்க சென்ற மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.

From around the web