குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்கத் தடை

 

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே. 
குறிப்பாக மதுரை உள்பட தென்மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக கடந்த சில நாட்களாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

courtralam

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் தண்ணீர் வரத்து குறைந்ததை அடுத்து மீண்டும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். இருப்பினும் குற்றால மலை பகுதிகளில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை காண்பதற்கு கண் குளிர்ச்சியாக உள்ளதாக சுற்றுலா பயணிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்


 

From around the web