பொருள் அனுப்ப முடியாது என கூறிய பிளிப்கார்ட்: இந்தியரிடம் மன்னிப்பு

 


நாகலாந்து வாடிக்கையாளர் ஒருவருக்கு பொருள் அனுப்ப முடியாது என கூறிய பிளிப்கார்ட் அதன் பிறகு சமூக வலைதளங்களில் எழுந்த கண்டனங்களை அடுத்து மன்னிப்பு கோரியுள்ளது 
நாகலாந்து பகுதியைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஏன் பொருள்களை அனுப்புவதில்லை என ப்ளிப்கார்ட் நிறுவனத்திடம் கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார் 

இந்த கேள்விக்கு பதிலளித்த ப்ளிப்கார்ட் நிறுவனம் இந்தியாவுக்கு வெளியே தங்கள் பொருள்களை வழங்குவதில்லை என கூறியிருந்தது

அப்படி என்றால் நாகலாந்து இந்தியாவுக்கு வெளியே உள்ளதா? என்று கேள்வி எழுப்பி பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிக்கப்பட்டது. இதுகுறித்த ஹேஷ்டேக்  சமூக வலைதளங்களில் பரவி பலர் பதிவுகளை செய்தனர்

இந்த கண்டனத்தை அடுத்து தவறு நடந்து விட்டதாகவும் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் பிளிப்கார்ட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்தியாவின் நம்பர் ஒன் ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக இருந்து வரும் பிளிப்கார்ட், தற்போது ஜியோ மார்ட், அமேசான் ஆகிய நிறுவனங்களின் போட்டியை சமாளித்து வரும் நிலையில் திடீரென நாகலாந்து பிரச்சனையில் சிக்கி கொண்டதால் அந்நிறுவனத்திற்கு சற்று பின்னடைவு என்றே கூறப்படுகிறது. 

From around the web