ஒரு கையில் கொடி, மறு கையில் தடி: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சால் பரபரப்பு!

 

தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழக அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தலுக்கு தயாராகி வருகின்றன 

ஒரு பக்கம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சூறாவளி தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து பிரச்சாரம் செய்து வருகின்றனர் 

rajendra balaji

இந்த நிலையில் அதிமுக மற்றும் திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின்போது அரசியல்வாதிகள் மேடையில் பேசும் ஒரு சில பேச்சுக்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது 

அந்த வகையில் சமீபத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் இளைஞர்கள் ஒரு கையில் தடியையும் மறுகையில் கட்சிக் கொடியையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

அதிமுகவில் மாணவர் அணியினர் ஒரு கையில் கட்சி கொடியையும் மறுகையில் தடியையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அப்போது தான் கட்சி வலுவாக இருக்கும் என்றும் அவர் பேசியுள்ளார். அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வன்முறையை தூண்டும் வகையில் பேசுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web