ஐந்து மண்டலங்கள்! மண்டலத்துக்கு மூன்று குழுக்கள் கோவையில் நடவடிக்கை தீவிரம்!

தொழில் நகரமான கோவையில் தொழில் கூடங்களில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்!
 
ஐந்து மண்டலங்கள்! மண்டலத்துக்கு மூன்று குழுக்கள் கோவையில் நடவடிக்கை தீவிரம்!

வளமிக்க மாநிலமாக உள்ளது நம் தமிழ்நாடு தமிழ்நாட்டில் தலைநகரமாக சென்னை உள்ளது.   சென்னைக்கு அடுத்து அனைவரும் மிகவும் நம்புகின்ற தமிழகத்தின் மாவட்டமாக உள்ள கோவை நகரம். மேலும் கோவை தொழில் நகரமாகவும் உள்ளது.  தமிழகத்தில் சில வாரங்களாக ஆட்கொல்லி, கண்ணுக்குத் தெரியாத கிருமி, உயிர்கொல்லி நோய் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தாக்கம் தலைவிரித்தாடுகிறது. தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் கொரோனா தாக்கமானது மிகவும் அதிகரித்துள்ளது.

covid 19

மேலும் சென்னையை தொடர்ந்து தமிழகத்தின் தொழில் நகரமான கோவையில்  கொரோனா  அதிகமாக காணப்படுகிறது. மேல் நேற்றைய தினம் கோவையில் 600க்கும் அதிகமான கொரோனா  கண்டறியப்பட்டது, மேலும் தற்போது வரை கோவையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  தற்போது கோவையில் கொரோனா  தடுப்பூசி போடும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 மேலும் கோவையில்  சுகாதாரத்துறை ஆனது சில தகவல்களையும் வெளியிட்டுள்ளது. அதன்படி கோவையில் இதுவரை 2.41 லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல்கள் உள்ளது. மேலும் கோவையில் நாளொன்றுக்கு சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா  கண்டறியப்பட்டுள்ளது. சிறு தொழிற்சாலை பணியாளர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி போடப்படுகிறது எனவும் தகவல் உள்ளது.

மேலும் இவை கோவை மாநகரம் கொடிசியா வளாகத்தில் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வருகிற 26ம் தேதிக்குள் அனைத்து தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் அனைவரையும் கொடிசியா வளாகத்திற்கு வரவழைத்து போடும் பணியை சுகாதாரத் துறையினர் மேற்கொண்டுள்ளனர் கோவையில் உள்ளதாகவும் ஐந்து மண்டலங்களில் மண்டலத்திற்கு மூன்று விதமாக குழுக்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக உள்ளது.

From around the web