ஐந்து மணிக்கு ஐந்து மாவட்டங்கள் ஆனந்தம்!குறிப்பா திருவண்ணாமலை மாவட்டம் கொண்டாட்டம்!

மாலை 5 மணிக்குள் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது!
 
ஐந்து மணிக்கு ஐந்து மாவட்டங்கள் ஆனந்தம்!குறிப்பா திருவண்ணாமலை மாவட்டம் கொண்டாட்டம்!

மக்கள் மத்தியில் கோடைகாலம் என்றாலே ஒரு அச்சம்தான் நிலவும். காரணம் என்னவெனில் இந்த கோடை காலம் தொடங்கி னால் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் ஆனது இயல்பு நிலையை  அதிகமாக காணப்படும். மேலும் சில பகுதிகளில் வெளியே செல்ல முடியாத அளவிற்கு அதிகமாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் கோடைகாலம் சில நாட்களுக்கு முன்பாக தொடங்கியது. ஆயினும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெப்ப நிலையை விட குளிர்ச்சியான வானிலை  காண்கிறது.

rain

காரணம் என்னவெனில் தமிழகத்தில் பல தினங்களாக பல மாவட்டங்களில் மழையும்,கன மழையும் பெய்து வருகிறது. இதனால் மழை பெய்யும் மாவட்டங்களில் வாழும் மக்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். மேலும் அவர்கள் கோடை வெட்பம் தனிந்ததாகவும் குடிநீர் பற்றாக்குறை குறைந்ததாகவும் எண்ணி இந்த கோடை மழையை அன்புடன் வரவேற்கின்றனர். மேலும் தமிழகத்தில் உள்ள ஒரு சில பகுதிகளில் நீர்நிலைகள் நிரம்பியதாகவும் காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் மக்கள் என அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் மேலும் ஒரு இன்பமான தகவல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் மாலை 5 மணிக்குள் 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி  இந்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் இன்பமான தகவலை கூறியுள்ளது. அதன்படி தர்மபுரி கள்ளக்குறிச்சி சேலம் திருவண்ணாமலை வேலூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

From around the web