மீன்பிடித் திருவிழா! போலீசாரை கண்டு பதறிய 10 கிராம மக்கள்!!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதி அருகே மீன்பிடித் திருவிழா பங்கேற்ற 10 கிராம மக்கள் ஓட்டம்
 
meen pidithal

தற்போது நம் தமிழகத்தில் ஊரடங்கு காலகட்டம் நிகழ்கிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மிகவும் கட்டுப்பாடுகள் தீவிரமாக கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் பல பகுதிகளில் மக்கள் வெளியே சென்றால் அவர்களுக்கு தக்க பதிலடியும் அவர்கள் மீது நடவடிக்கையும் அவர்கள் வாகனங்கள் பறிக்கப்பட்டு வருகிறது. பல பகுதிகளில் சமூக இடைவெளி பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை யும் அவ்வப்போது எடுக்கப்பட்டு வருகிறது. இன்று காலை முதலே பல பகுதிகளில் மக்கள் ஒன்றுகூடி திறந்துள்ளனர்.fish catching

காரணஎன்னவெனில்  இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல பகுதிகளில் அரசுக்கு தெரியாமல் இறைச்சிகள் விற்கப்படுகிறது. இதனை அறிந்து காவல்துறையினரும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இன்றைய தினம் மீன்பிடி திருவிழாவும் தமிழகத்தில் நடைபெற்றுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. காரணம் என்னவெனில் தற்போது தமிழகத்திலும் நிகழும் போதும் இந்த மீன்பிடி திருவிழா தேவையா? என்றும் பல பகுதிகளில் கேள்விகள் எழுகின்றன.

இச்சம்பவம் கடலூர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. அதன்படி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் உள்ள மன்னம்பாடி பகுதியில் உள்ள ஏரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாக இறங்கி மீன்பிடி திருவிழாவை கொண்டாடி உள்ளனர். இதில் மன்னம்பாடி மற்றும் அதனை சுற்றி உள்ள 10 கிராம மக்கள் கலந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர்கள் வருஷந்தோறும் மீன்களை பிடித்து திருவிழா கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது. இதனை அறிந்த காவல்துறையினர் நாலா பக்கமும் சுற்றி வளைக்க அவர்கள் காவல் துறையினர் கண்டவுடன் தலைதெறிக்க ஓடியுள்ளனர். மேலும் அதில் பெண்கள் ஆண்கள் இளைஞர்கள் என நூற்றுக்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ள குறிப்பிடத்தக்கது.

From around the web