மீன்பிடிக்க செல்ல வேண்டாம்: அம்பன் கரை கடந்தும் மீண்டும் எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவாகிய அம்பன் புயல் நேற்று மேற்குவங்க மாநிலம் அருகே கரை கடந்ததை அடுத்து கொல்கத்தா உள்பட பல நகரங்கள் பெரும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளது இந்த நிலையில் அடுத்த மூன்று நாட்களுக்கு வட தமிழகத்தில் அனல் காற்று வீசக்கூடும் என்றும், வட தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாக கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், இதனால்
 
மீன்பிடிக்க செல்ல வேண்டாம்: அம்பன் கரை கடந்தும் மீண்டும் எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவாகிய அம்பன் புயல் நேற்று மேற்குவங்க மாநிலம் அருகே கரை கடந்ததை அடுத்து கொல்கத்தா உள்பட பல நகரங்கள் பெரும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளது

இந்த நிலையில் அடுத்த மூன்று நாட்களுக்கு வட தமிழகத்தில் அனல் காற்று வீசக்கூடும் என்றும், வட தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாக கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், இதனால் தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கடற்கரை பகுதி , மன்னார் வளைகுடா பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் அடுத்த மூன்று நாட்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

அம்பன் புயல் காரணமாக கடந்த ஒரு வாரமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web