"சுருக்குமடி வலைக்கு அனுமதி இல்லை" கூட்டத்தில் மீனவர்கள் முடிவு!!

இனி சுருக்குமடி வலைக்கு அனுமதி கிடையாது என்று கூட்டத்தில் மீனவர்கள் முடிவெடுத்துள்ளனர்
 
surukumadi

தற்போது நம் தமிழகத்தில் மழைக்காலம் நிகழ்கிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இது தமிழகத்தில் வாழும் மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக காணப்படுகிறது. அதே சமயத்தில் கரையோர மக்களுக்கு இவை பெரும் சோகத்தை கொடுப்பதாக காணப்படுகிறது, ஏனென்றால் மழை பெய்ய தொடங்கினால் கடலில் அலைகள் சீற்றத்துடன் காணப்படும். அதனால் அங்கு கடலுக்கு செல்ல முடியாத நிலை கூட உருவாகும்.fishers

இந்த நிலையில் அவர்களால் மீன்பிடிக்கச் செல்ல முடியாது, மேலும் அவ்வப்போது காற்றும் கடற்கரை பகுதியில் வேகமாக வீசும். இந்த நிலையில் அவர்கள் மீன் பிடிப்பதும், அங்கு இருப்பதும்  மிகவும் கடினமாக காணப்படும். இதன் மத்தியில் தற்போது மீனவர்கள் சங்கம் சில முக்கிய அறிவிப்புகளை கூறியுள்ளது. அதன்படி சுருக்குமடி  வலைக்கு  அனுமதி கிடையாது என்று மீனவர்கள் கூட்டத்தில் முடிவெடுத்துள்ளனர்.

மேலும் சுருக்குமடிவலை, அதிவேக விசைப்பலகை அனுமதிப்பது இல்லை என 6 மாவட்ட மீனவர்கள் கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளனர். மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடியில் நடைபெற்ற 6 மாவட்ட மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாகை புதுக்கோட்டை கடலூர் புதுச்சேரி காரைக்கால் உட்பட 6 மாவட்ட மீனவ பிரதிநிதிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.

From around the web