மீனவர்களே கடலுக்கு போகவேண்டாம்! "60 கிலோ மீட்டர்" வேகத்தில் பலத்த காற்று! கடல் அலைகள் சீற்றம்!!

மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது!
 
fishers

தற்போது நம் தமிழகத்தில் கோடை காலமாக இருப்பினும் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் காற்று அதிகமாக வீசுகிறது. மேலும் பல பகுதிகளில் இந்த காற்றானது சூறைக்காற்று போல வீசி மக்களுக்கு ஓரளவுக்கு இதமான சூழ்நிலையை உருவாக்குகிறது. மேலும் இந்த காற்றின் காரணமாக தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் வெப்பநிலையும் குறைக்கப்பட்டு மக்கள் ஓரளவு திருப்தி அடைகின்றனர். ஆனால் காற்று காலம் தொடங்கினால் கடற்கரையோர மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும். ஏனென்றால் காற்றானது அலைகடலில் நிலை கொண்டிருப்பதால் மீன்பிடிக்க செல்ல வானிலை ஆய்வு மையம் எச்சரித்து விடும்.fisher

மேலும் தடைவிதித்து விடும். இதனால் அவர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் தங்களது தொழிலையும் பார்க்க முடியாமலும் தவிப்பார்கள். தற்போது வானிலை ஆய்வு மையம் மீண்டும் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி அடுத்த 48 மணி நேரத்திற்கு குமரிக்கடல், மன்னார் வளைகுடாவில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று கூறியுள்ளது. மேலும் கேரளா லட்சத்தீவு மாலத்தீவு இலங்கையின் கிழக்கு கடல் பகுதியில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம்.

இந்த பலத்த காற்று வீசுவதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் குளச்சல் தனுஷ்கோடி இடையே நாளை நள்ளிரவு வரை கடல் அலைகள் அதிக சீற்றத்துடன் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் கடல் அலைகள் 3.5 மீட்டர் முதல் நான்கு மீட்டர் வரை உயரம் கூடுவதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு கடற்கரைக்கு செல்லாமல் இருப்பது நல்லது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

From around the web