சென்னையில் இன்று முதல் இலவச பஸ் பாஸ்: 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெறலாம்!


 

 

சென்னையில் இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு பேருந்துகளில் பயணம் செய்ய இலவச பாஸ் வழங்கப்படுகிறது. இந்த வசதியை 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சமீபத்தில் அறிவிப்பு செய்தார். இதனை அடுத்து இன்று முதல் பஸ் பாஸ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது

சென்னையில் உள்ள 21 பணிமனைகளிலும் 19 பேருந்து நிலையங்களிலும் இந்த இலவச பஸ் பாஸ் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாதம் ஒன்றுக்கு 10 பஸ் பாஸ் வீதம், ஆறு மாதங்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பஸ் பாஸ் பெற முதலில் http://mtcbus.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்து பதிவு செய்து கொண்டு அதன்பின்னர் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

bus pass3

புதிதாக பஸ் பாஸ் வாங்குபவர்கள் தங்கள் வயது மற்றும் இருப்பிடச் சான்றிதழ் குறித்த ஆவணங்களை பணிமனைகளுக்கு நேரில் சென்று விண்ணப்பித்து இலவச டோக்கன்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்கனவே இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு இருந்த நிலையில் திடீரென அது நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து தற்போது மீண்டும் இலவச பஸ் பாஸ் வசதி தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web