திருச்சியில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு!!

கொரோனாவால் உலகமே ஸ்தம்பித்து வருகையில், இந்தியாவில் கொரோனா மூன்றாவது கட்டத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பானது ஒருநாளைக்கு 8000 என்ற எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றது. அதிலும் கொரோனா பாதிப்பானது மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத் போன்ற 3 மாநிலங்களில் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோதும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் தீவிரமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கையினைக் கட்டுக்குள் கொண்டுவந்த நிலையிலும், தலைநகரான சென்னையில் கட்டுக்குள்
 
திருச்சியில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு!!

கொரோனாவால் உலகமே ஸ்தம்பித்து வருகையில், இந்தியாவில் கொரோனா மூன்றாவது கட்டத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பானது ஒருநாளைக்கு 8000 என்ற எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றது.

அதிலும் கொரோனா பாதிப்பானது மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத் போன்ற 3 மாநிலங்களில் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோதும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் தீவிரமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

திருச்சியில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு!!

மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கையினைக் கட்டுக்குள் கொண்டுவந்த நிலையிலும், தலைநகரான சென்னையில் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

இந்தநிலையில் மாநிலத்தின் மத்தியப் பகுதியான திருச்சியில் இதுவரை கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 88 ஆக உள்ளநிலையில், 70 பேர் குணடைந்து வீடு திரும்ப 17 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பால் ஒருவர் முதல் முறையாக உயிர் இழந்துள்ளார். அதாவது திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் வசித்துவந்த 70 வயது பாட்டிக்கு கொரொனாத் தொற்று இருந்ததையடுத்து கடந்த ஒரு வாரகாலமாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் நேற்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிர் இழந்துள்ளார். இது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web