அண்டை மாநிலத்தில் இன்று முதல் கல்லூரி திறப்பு: தமிழகத்தில் எப்போது?

 
அண்டை மாநிலத்தில் இன்று முதல் கல்லூரி திறப்பு: தமிழகத்தில் எப்போது?

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 7 மாதங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது என்பது தெரிந்ததே. தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் நவம்பர் 16ம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து அதன் பின்னர் அந்த அறிவிப்பை வாபஸ் பெற்றது. இதனால் தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் எப்போது திறக்கும் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள் இன்று முதல் தளத்தில் திறக்கப்படுகின்றன என்பது குறிப்பிடதக்கது. கொரோனா அச்சம் காரணமாக இதுவரை இணையவழியில் மட்டும் படித்து வந்த கல்லூரி மாணவர்கள் தற்போது வகுப்புகளில் பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

college open

ஆனால் அதே நேரத்தில் ஆசிரியர்கள் ஊழியர்கள் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் இருந்தால் மட்டுமே கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என உத்தரவிடப்பட்டுள்ளது 

மேலும் கல்லூரி மாணவர்கள் தங்கள் பெற்றோரின் ஒப்புதல் கடிதங்களை கல்லூரிக்கு வரும்போது பெற்றுக் கொண்டு வர வேண்டும் என்றும் அந்த ஒப்புதல் கடிதம் உள்ள மாணவர்கள் மட்டுமே கல்லூரிகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கர்நாடக மாநில உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web