கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து: 16 பேர் பரிதாப பலி

 
கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து: 16 பேர் பரிதாப பலி

கொரனோ பாதிப்பால் ஒவ்வொரு நாளும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் இருக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

குஜராத்தில் உள்ள கொரோனா மையத்தில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அந்த மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டிருந்த செவிலியர்கள் 2 பேர் தீ விபத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 

fire

இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் மருத்துவமனையில் பெரும்பாலான இடங்களில் தீ விபத்தால் பெரும் சேதம் அடைந்தது தெரிய வந்துள்ளது. இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web