நீட் பயத்தால் இறந்த மாணவியின் குடும்பத்துக்கு நிதியுதவி: ஆறுதல் கூறிய உதயநிதி 

நீட் தேர்வு பயம் காரணமாக ஜோதி ஸ்ரீ துர்கா என்ற மாணவி இன்று காலை உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

 

நீட் தேர்வு பயம் காரணமாக ஜோதி ஸ்ரீ துர்கா என்ற மாணவி இன்று காலை உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

இந்த தற்கொலையை அடுத்து நீட் தேர்வுக்கு எதிரான குரல் வலுத்து வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தனது கடுமையான கண்டனத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தார் 

இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மதுரை மாணவியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து ரூபாய் 5 லட்சம் நிதி உதவி வழங்கினார்

நீட்தேர்வு மன அழுத்தம் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டது ஒரு துயரமான சம்பவம் என்றும் வருடந்தோறும் மாணவர்களின் தற்கொலை நடந்து கொண்டிருப்பதாகவும் இதனை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய உதயநிதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது 

From around the web