கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்தா? மதிப்பெண் கணக்கிடுவது எப்படி?

கொரோனா வைரஸ் காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு உட்பட பள்ளிகளில் உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டது தெரிந்ததே. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் காலாண்டு மட்டும் அரையாண்டுத் தேர்வின் அடிப்படையில் மதிப்பெண்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது இந்த நிலையில் கல்லூரிகளில் ஏற்கனவே முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. இதனை அடுத்து தற்போது இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளையும் பல்கலைக்கழகங்கள்
 

கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்தா? மதிப்பெண் கணக்கிடுவது எப்படி?

கொரோனா வைரஸ் காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு உட்பட பள்ளிகளில் உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டது தெரிந்ததே. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் காலாண்டு மட்டும் அரையாண்டுத் தேர்வின் அடிப்படையில் மதிப்பெண்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது

இந்த நிலையில் கல்லூரிகளில் ஏற்கனவே முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. இதனை அடுத்து தற்போது இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளையும் பல்கலைக்கழகங்கள் ரத்து செய்யலாம் என யூஜிசியின் நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

ஹரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையிலான நிபுணர் குழு இந்த பரிந்துரையை மத்திய அரசுக்கு வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் பல்கலைக்கழகங்கள் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்தால் முந்தைய தேர்வுகளில் மாணவர்கள் வாங்கிய மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி குறித்து பல்கலைக்கழக நிர்வாகிகள் முடிவெடுக்கலாம் என்றும் கூறியுள்ளது

அதுமட்டுமின்றி கொரனோ வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து கொண்டே வருவதால் புதிய மாணவர்களை வரும் அக்டோபர் மாதத்திற்கு முன்பாக சேர்க்க வேண்டாம் என்றும் கல்லூரி தொடங்குவதில் அவசரப்பட வேண்டாம் என்றும் பரிந்துரை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web