இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் எழுத வேண்டுமா? சுப்ரீம் கோர்ட் முக்கிய தீர்ப்பு

இந்தியா முழுவதும் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது என்பதும் அரியர் வைத்த மாணவர்களும் கூட பாஸ் என அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் மட்டும் செமஸ்டர் தேர்வுகளை எழுதியே ஆகவேண்டுமென யூஜிசி அறிவித்துள்ளது கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக இறுதி ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும் இறுதியாண்டு மாணவர்களும் பாஸ் என அறிவிக்க வேண்டும் என்றும் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை வைத்தன
 

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் எழுத வேண்டுமா? சுப்ரீம் கோர்ட் முக்கிய தீர்ப்பு

இந்தியா முழுவதும் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது என்பதும் அரியர் வைத்த மாணவர்களும் கூட பாஸ் என அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் மட்டும் செமஸ்டர் தேர்வுகளை எழுதியே ஆகவேண்டுமென யூஜிசி அறிவித்துள்ளது

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக இறுதி ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும் இறுதியாண்டு மாணவர்களும் பாஸ் என அறிவிக்க வேண்டும் என்றும் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை வைத்தன

ஆனால் இந்த கோரிக்கையை நிராகரித்த யுஜிசி இறுதி ஆண்டு மாணவர்கள் கண்டிப்பாக செமஸ்டர் தேர்வுகளை எழுத வேண்டும் என அறிவித்து இருந்தது. இந்த நிலையில் யுஜிசியின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 31 மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்

இந்த வழக்கு கடந்த சில வாரங்களாக நடைபெற்ற நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. இறுதி ஆண்டு மாணவர்கள் செமஸ்டர் தேர்வு எழுத வேண்டுமா? வேண்டாமா? என்பது இன்னும் ஒரு சில மணி நேரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் மூலம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web